Home நாடு காணொளியில் இருப்பது அஸ்மின் என்று நிரூபணமானால், அவர் பதவி விலக வேண்டும்!- அன்வார்

காணொளியில் இருப்பது அஸ்மின் என்று நிரூபணமானால், அவர் பதவி விலக வேண்டும்!- அன்வார்

389
0
SHARE

கோலாலம்பூர்: பொருளாதார அமைச்சர் அஸ்மின் அலியை சம்பந்தப்படுத்திய ஓரினச் சேர்க்கை காணொளியில் ஒருவேளை இருப்பது அஸ்மின் அலிதான் என கண்டறியப்பட்டால், அவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று தனது தெளிவான நிலைப்பாட்டை இன்று புதன்கிழமை அன்வார் இப்ராகிம் வெளியிட்டார்.

ஆயினும், இன்னும் இது காவல் துறையினரின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், காவல் துறையினர் அந்த காணொளியில் உள்ள நபர்களை இன்னும் அடையாளம் காணவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

அஸ்மின் விடுப்பில் செல்லவோ அல்லது பதவி விலகவோ கூடாது என்ற நிலைப்பாட்டை தாம் ஆரம்பத்தில் எடுத்ததாக அவர் கூறினார். ஆனால் சமீபத்திய முன்னேற்றங்களை கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

முன்னதாக, பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் இன்று அந்த காணொளி விவகாரமாக பேசிய போது, காவல் துறையினரின் விசாரணை நிலுவையில் இருப்பதால் விடுப்பில் செல்ல விரும்பினால் அஸ்மின் செல்லலாம் என்று கூறியிருந்தார்.

Comments