Home நாடு 18 ஜெபிஜெ அதிகாரிகள் இன்று முதல் குற்றம் சாட்டப்படுவர்!

18 ஜெபிஜெ அதிகாரிகள் இன்று முதல் குற்றம் சாட்டப்படுவர்!

701
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன்: பினாங்கு சாலை போக்குவரத்துத் துறையைச் சேர்ந்த (ஜேபிஜே) 18 அதிகாரிகள் இன்று புதன்கிழமை முதல் மூன்று நாட்களுக்கு பட்டர்வொர்த் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவார்கள் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் லத்தீஃபா கோயா தெரிவித்தார்.

அவர்களில் 6 பேர் இன்று குற்றம் சாட்டப்படுவர் என்றும், மேலும் அறுவர் நாளை வியாழக்கிழமை குற்றம் சாட்டப்படுவர் என்றும் அவர் குறிப்பிட்டார். மீதம் உள்ளவர்கள் வெள்ளிக்கிழமை அன்று குற்றம் சாட்டப்படுவார்கள்.

ஜெபிஜெ விவகாரத்தில், நாங்கள் பல அடுக்குகள், அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் அல்லாதவர்களை எதிர்கொள்கிறோம்என்று லத்தீஃபா நேற்று ஜோர்ஜ் டவுனில் செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறினார்.

#TamilSchoolmychoice

உயர் மட்ட பதவியிலிருக்கும் அதிகாரிகளின் கைது பற்றி வினவிய போது, தங்களின் நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்று லத்தீஃபா தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் முதல், 68 சாலை போக்குவரத்து அதிகாரிகள், இரண்டு ஸ்பாட் அதிகாரிகள், ஒன்பது பொது மக்கள் ஒப்ஸ் சாராட்” எனும் அதிரடி நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்டனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போக்குவரத்துக் குற்றங்களைச் செய்த பார வண்டி ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை தவிர்ப்பதற்காக 80,000 ரிங்கிட்டுக்கும் மேலான பணத்தை ஊழலாகப் பெற்றதாகக் கூறப்படுகிறது.