Home நாடு போர்ட்டிக்சன் அருகே சிதைந்த ‘பாதுகாப்புக் கவசம்’ கண்டுபிடிப்பு!

போர்ட்டிக்சன் அருகே சிதைந்த ‘பாதுகாப்புக் கவசம்’ கண்டுபிடிப்பு!

471
0
SHARE
Ad

Untitledபோர்டிக்சன்,மார்ச் 12 – போர்டிக்சன் அருகே கடலில் 10 மைல்களுக்கு அப்பால், மீனவர்கள் சிலர் விமானத்தில் பயன்படுத்தப்படும் பயணிகள் பாதுகாப்பு கவசம் (Life raft) ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது.

அந்த பாதுகாப்பு கவசத்தில் “Boarding” என்று எழுத்தப்பட்டிருந்ததாகக் கூறப்படுகின்றது.

இது குறித்து அவர்கள் உடனடியாக மலேசியக் கடற்படை அதிகாரிகளுக்கு (Malaysian Maritime Enforcement Agency – MMEA) தகவல் தெரிவித்துள்ளனர். விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த கப்பல்கள் கோல திங்கியில் இருந்து அந்த குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்துள்ளனர்.

#TamilSchoolmychoice

அந்த பாதுகாப்புக் கவசம் மிகவும் சேதமடைந்திருந்தாகவும், அதனால் அதை நீரில் மூழ்குவதில் இருந்து தடுக்க முடியவில்லை என்றும் மீனவர்கள் கூறியுள்ளனர்.

இது குறித்து அஸ்மான் முகமட் (வயது 40) என்ற மீனவர் கூறுகையில், “மாஸ் விமானம் காணாமல் போன தகவலை நாங்களும் செய்திகளில் படித்து வருகின்றோம். அதனால் தான் நாங்கள் கண்டறிந்த அந்த பாதுகாப்பு கவசம் MH370 விமானத்துடையதாக இருக்கலாம் என்று தகவல் தெரிவித்தோம்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த தகவலை மலேசிய கடற்படை அதிகாரிகளும் தற்போது உறுதிப்படுத்தியுள்ளனர்.

முன்னதாக, சீன கடலில் மீட்புக் குழுவினர் மஞ்சள் நிற பொருள் ஒன்றை கண்டறிந்தனர் என்று சீனாவின் சின்ஹுவா செய்தி நிறுவனம் தங்களது டிவிட்டரில் தகவல் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.