Home நாடு நஜிப், மகாதீர் மீது ஐசெக எம்பி காவல்துறையில் புகார்!

நஜிப், மகாதீர் மீது ஐசெக எம்பி காவல்துறையில் புகார்!

801
0
SHARE
Ad

Lim-Lip-Eng

கோலாலம்பூர், செப்டம்பர் 25 – பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் மற்றும் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் ஆகிய இருவர் மீதும் சிகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் (படம்) காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

நேற்று புதன்கிழமை மாலை 3.27 மணிக்கு செந்தூல் காவல் நிலையத்தில் இப்புகார்கள் அளிக்கப்பட்டன.

#TamilSchoolmychoice

உணர்ச்சிகளைத் தூண்டக்கூடிய விவகாரங்கள் தொடர்பிலான புகார்கள் குறித்து 24 மணி நேரத்தில் விசாரணை தொடங்கும் என உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் வாக்குறுதி அளித்திருப்பதே தாம் இந்த புகார் அளிக்கக் காரணம் என ஐசெகவைச் சேர்ந்த லிம் லிப் எங் தெரிவித்தார்.

துன் மகாதீருக்கு எதிரான புகார் மனுவில், அவர் தமது வலைப்பக்கத்தில் கடந்த 2013 ஏப்ரல் 11ஆம் தேதி ‘கேலாங் பாத்தா’ என்ற தலைப்பில்
பதிவிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி உள்ளார் லிம் லிப் எங்.

“அப்பதிவின் சாராம்சங்கள் லிம் கிட் சியாங்கை (ஐசெக தலைவர்) குற்றம்சாட்டுவது போல் உள்ளன. மேலும் பல இன மக்களைக் கொண்ட மலேசியாவில் குழப்பத்தையும் பிரிவினையையும் ஏற்படுத்துவதாகவும் உள்ளன,” என லிம் லிப் எங் கூறியுள்ளார்.

கடந்த 2010-ல் அம்னோ தலைவர் என்ற முறையில் பிரதமர் நஜிப் ஆற்றிய உரை குறித்து மலாய் நாளேடு ஒன்றில் வெளியான செய்தியே அவர் மீதான புகாருக்கு காரணம் என்றும் லிம் லிப் எங் தெரிவித்தார்.

“அச்சமயம் அம்னோ பொதுக்குழு கூட்டத்தில் பிரதமர் நஜிப் பேசியபோது, “நமது எலும்புகளும் உடலும் நொறுக்கப்பட்டாலும், நமது உடலில் இருந்து உயிர் பிரிக்கப்பட்டாலும், சகோதர சகோதரிகளே… என்ன நடந்தாலும் புத்ரா ஜெயாவை நாம் பாதுகாக்க வேண்டும் என கூறினார்” என லிம் லிப் எங் புகாரில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.