Home நாடு பக்காத்தானுடன் இணையும் திட்டத்தை கைவிட்டது பிஎஸ்எம்!

பக்காத்தானுடன் இணையும் திட்டத்தை கைவிட்டது பிஎஸ்எம்!

447
0
SHARE
Ad

Pakatan-PSM1-300x202

கோலாலம்பூர், நவம்பர் 5 – கடந்த இரண்டு வருடங்களாக பக்காத்தானுடன் இணைவதற்காக முயற்சி செய்து வரும் பிஎஸ்எம் (Parti Sosialis Malaysia) கட்சி,பக்காத்தானிடமிருந்து எந்த ஒரு பதிலும் வராததால், தனது திட்டத்தை கைவிடும் முடிவுக்கு வந்துள்ளது.

எனினும், பிஎஸ்எம் கட்சி பக்காத்தானுக்கு ஆதரவாக தேசிய முன்னணிக்கு எதிராக அடுத்த பொதுத்தேர்தலிலும் செயல்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எஸ்.அருட்செல்வன் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“கடந்த நவம்பர் 2-ம் தேதி நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில், பக்காத்தானுடன் இணையும் திட்டத்தை பிஎஸ்எம் கைவிடும் முடிவு எடுக்கப்பட்டது” என்று அருட்செல்வம் நேற்று தனது பேஸ்புக் பக்கத்தின் குறிப்பிட்டுள்ளார்.

“13-வது பொதுத்தேர்தலில் பிஎஸ்எம் தனது தேர்தல் அறிக்கையில் பக்காத்தானுக்கு ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்திருந்தது. அதுமட்டுமின்றி ஆகஸ்ட்8, 2013 அன்று மீண்டும் ஒரு அறிக்கையையும் வெளியிட்டுள்ளது. எனினும் இன்று வரை பக்காத்தானிடமிருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை” என்றும் அருட்செல்வன் கூறியுள்ளார்.

மேலும், கடந்த மூன்று தேர்தல்களாக பிஎஸ்எம் கட்சி ஒரு நாடாளுமன்ற தொகுதி மற்றும் 3 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்டு வந்தது. ஆனால் வரும் 14 -வது பொதுத்தேர்தலில் நாடாளுமன்ற தொகுதி மற்றும் சட்டமன்ற தொகுதிகளை அதிகரிக்கப்போவதாகவும் அருட்செல்வன் தெரிவித்துள்ளார்.