Home நாடு நஜிப் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் முடிவு!

நஜிப் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் முடிவு!

651
0
SHARE
Ad

najib-and-MACCகோலாலம்பூர், ஜூலை 3 – வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிக்கை, 1எம்டிபி விவகாரத்தில் நஜிப் மீது கூறியுள்ள குற்றச்சாட்டை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரிக்க முடிவு செய்துள்ளது.

இது குறித்து ஊழல் தடுப்பு ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் ரோஹைசத் யாகூப்பா கூறுகையில், “பிரதமர் நஜிப் மீது 1எம்டிபி விவகாரத்தில் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிக்கை தெரிவித்த 700 மில்லியன் டாலர் பணப் பரிவர்த்தனை விவகாரத்தை விசாரிக்க எங்கள் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதில் ஏதேனும் ஊழல் நடந்துள்ளதா?, இந்த விவகாரத்தின் உண்மை நிலை என்ன என்பதை நாங்கள் தெளிவுபடுத்துவோம்” என்று கூறியுள்ளார்.

வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நஜிப் மீதான குற்றச்சாட்டை அறிவித்துள்ள இந்தத் தருணத்தில், நாட்டின் நாணய மதிப்பு அமெரிக்க டாலரை ஒப்பிடுகையில் ஏறக்குறைய 10 வருடக் காலத்தில் காணாத மிகப் பெரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

#TamilSchoolmychoice

இது குறித்து யூபிஎஸ் குளோபல் சொத்து மேலாண்மை அமைப்பின் பான்-ஆசியா நிரந்தர வருவாய்ப் பிரிவின் தலைவர் ஆஷ்லே பெர்ராட் கூறுகையில், “மக்கள் இந்த விவகாரத்தை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். அதன் எதிரொலி தான் ரிங்கிட்டின் வீழ்ச்சிக்கான காரணம். ஆசியா அளவில் இன்று மலேசிய நாணயத்தின் மதிப்பு தான் பெரிய அளவில் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது” என்று கூறியுள்ளார்