Home நாடு முக்ரீஸ் உடனான சந்திப்பு வழக்கமான ஒன்று தான் – மொகிதின் விளக்கம்

முக்ரீஸ் உடனான சந்திப்பு வழக்கமான ஒன்று தான் – மொகிதின் விளக்கம்

635
0
SHARE
Ad

unnamedகோலாலம்பூர், ஜூலை 29 – கெடா மாநில மந்திரி பெசார் டத்தோ முக்ரிஸ் மகாதீர், தன்னை சந்தித்தது வழக்கமான ஒன்று தான் என்றும், அவருடன் சேர்ந்து எந்த ஒரு சதித் திட்டமும் தீட்டவில்லை என்றும் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தெரிவித்துள்ளார்.

நேற்று துணைப்பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட டான்ஸ்ரீ மொகிதின் யாசின், அது குறித்து சில விளக்கங்களை அளிக்க இன்று மதியம் புக்கிட டாமன்சாராவிலுள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அச்சந்திப்பில் பேசிய மொகிதின், நேற்று இரவு தனது வீட்டில் நடைபெற்ற முக்ரீஸ் உடனான சந்திப்பில் எந்த ஒரு உள்நோக்கமும் இல்லை என்று தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“அதில் எந்த ஒரு சதியும் இல்லை. அது  ஒரு  வழக்கமான சந்திப்பு தான். எனது நண்பருக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டிருந்தால் நானும்  அதைத் தான்  செய்திருப்பேன்” என்று மொகிதின் தெரிவித்துள்ளார்.