Home நாடு ஊசி மூலம் எச்ஐவி வைரசை பரப்புகிறதா ஐஎஸ் அமைப்பு?

ஊசி மூலம் எச்ஐவி வைரசை பரப்புகிறதா ஐஎஸ் அமைப்பு?

1002
0
SHARE
Ad

Noor Rashid Ibrahimகோலாலம்பூர் – ஐஎஸ் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஊசி மூலம் எச்ஐவி வைரசைப் பரப்புவதாகவும், எனவே எச்சரிக்கையாக இருக்கும் படியும் புக்கிட் அம்மான் காவல்துறைத் தலைமையகம் அறிக்கை விட்டிருப்பதாகக் கூறும் தகவலில் உண்மை இல்லை என தேசியக் காவல்படையின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ நூர் ரஷீத் இப்ராகிம் தெரிவித்திருக்கிறார்.

பிரபல மருத்துவப் பல்கலைக்கழகத்தில் இருந்து வருவதாகவும், இலவசமாக இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கண்டறிவதாகவும் கூறி ஐஎஸ் தீவிரவாதிகள் ஊசி மூலம் எச்ஐவி வைரசைப் பரப்புவதாக நட்பு ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

அதனை மறுத்திருக்கும் நூர் ரஷீத், புக்கிட் அம்மான் அவ்வாறான எச்சரிக்கை அறிக்கையை அனுப்பவில்லை என்றும், என்றாலும் வீட்டுக்கு வரும் முன்பின் தெரியாத நபர்களிடம் பொதுமக்கள் எப்போதுமே எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice