Home நாடு மகாதீரின் பட்டத்தைத் திரும்பப் பெற்றது கிளந்தான் அரண்மனை!

மகாதீரின் பட்டத்தைத் திரும்பப் பெற்றது கிளந்தான் அரண்மனை!

811
0
SHARE
Ad

mahathirகோலாலம்பூர் – முன்னாள் பிரதமரும், நடப்பு பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் தலைவருமான துன் டாக்டர் மகாதீர் முகமதுவின் டிகே (Darjah Kerabat Al-Yunusi ) பட்டத்தை கிளந்தான் அரண்மனை திரும்பப் பெற்றுக் கொண்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.

கிளந்தான் அரண்மனையில் இருந்து கடந்த பிப்ரவரி 6-ம் தேதி, மகாதீரின் வீட்டிற்கு அதிகாரப்பூர்வக் கடிதம் வந்ததாக மகாதீர் அலுவலகம் உறுதிப்படுத்தியிருக்கிறது.ஒரே 25 பேருக்கு மட்டுமே வழங்கப்படும் கிளந்தான் அரண்மனையில் அரச விருதான அப்பட்டத்தை கடந்த 2002-ம் ஆண்டு, தற்போதைய பேரரசரும், கிளந்தான் சுல்தானுமான சுல்தான் முகமது V-ன் தந்தையான சுல்தான் இஸ்மாயில் பெட்ரா, மகாதீருக்கு வழங்கினார்.

அண்மையில் புகிஸ் விவகாரத்தில் சிலாங்கூர் சுல்தான் தன்னை விமர்சித்ததால் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது தனது இரு அரச விருதுகளை கடந்த டிசம்பர் மாதம் திருப்பிக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. .