Home நாடு 2018-ல் வாக்காளராகப் பதிவு செய்தவர்கள் பொதுத்தேர்தலில் வாக்களிக்க முடியாது!

2018-ல் வாக்காளராகப் பதிவு செய்தவர்கள் பொதுத்தேர்தலில் வாக்களிக்க முடியாது!

974
0
SHARE
Ad
முகமட் ஹாஷிம் அப்துல்லா – மலேசிய தேர்தல் ஆணையத் தலைவர்

கோலாலம்பூர் – 2018, அதாவது இந்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து வாக்காளராகப் பதிவு செய்தவர்கள், வரும் மே 9-ம் தேதி நடைபெறவிருக்கும் 14-வது பொதுத்தேர்தலில் வாக்களிக்க முடியாது எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

இந்த ஆண்டு வாக்காளராகப் பதிவு செய்தவர்களின் விவரங்கள் இன்னும் அரசாங்கப் பதிவேட்டில் சேர்க்கப்படவில்லை என்பதால், அவர்களின் வாக்காளர் பதிவு கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது என்றும் தேர்தல் ஆணையம் விளக்கமளித்திருக்கிறது.

மேலும், 2017-ம் ஆண்டின் நான்காவது காலாண்டு வரையிலான வாக்காளர்கள் பதிவின் அடிப்படையில் தான் 14-வது பொதுத்தேர்தலில் வாக்களிப்பு நடைபெறவிருப்பதாகவும், அதன் படி மொத்தம் 14,940,624 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இருப்பதாகவும் தேர்தல் ஆணையம் நேற்று செவ்வாய்க்கிழமை புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்திருக்கிறது.

#TamilSchoolmychoice