Home நாடு அஷ்ராப் வாஜ்டி புதிய அம்னோ இளைஞர் தலைவர்

அஷ்ராப் வாஜ்டி புதிய அம்னோ இளைஞர் தலைவர்

1165
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நேற்று சனிக்கிழமை நடைபெற்ற அம்னோ இளைஞர் பகுதித் தலைவருக்கான தேர்தலில் அம்னோ உச்சமன்ற உறுப்பினர் அஷ்ராப் வாஜ்டி டுசுக்கி (படம்) வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட 7 வேட்பாளர்களைத் தோற்கடித்து அவர் வெற்றி பெற்றுள்ளார்.

அம்னோ புத்ரி பிரிவுக்கான தலைவர் தேர்தலில் நடப்பு துணைத் தலைவரான சாஹிடா சாரிக் கான் வெற்றி பெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

#TamilSchoolmychoice

இதற்கிடையில், இளைஞர், மகளிர் பகுதித் தலைமைப் பகுதிகளுக்கான தேர்தல்கள் குறித்துக் கருத்து தெரிவித்த துங்கு ரசாலி ஹம்சா தான் ஆதரித்த வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.