Home நாடு மனிதநேய, நற்செயல்களை ஊக்குவிக்கும் கல்விச் சூழலை ஏற்படுத்துவோம்!- கல்வி அமைச்சு

மனிதநேய, நற்செயல்களை ஊக்குவிக்கும் கல்விச் சூழலை ஏற்படுத்துவோம்!- கல்வி அமைச்சு

940
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசியாவின் கல்வித் திட்டத்தை மேலும் பலப்படுத்தும் விதமாக, மனிதநேயம் மற்றும் நற்செயல்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அணுகுமுறையைக் கல்வி அமைச்சு மேற்கொள்ளும் என கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் கூறினார்.

இம்மாதிரியான கல்விச் சூழல்கள், அன்பு, மகிழ்ச்சி மற்றும் மரியாதை போன்ற மதிப்புகளுடன் மாணவர்களை உருவாக்கும் என அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

வேடிக்கை விளையாட்டுகள்,பாதுகாப்பு மற்றும் நேர்மறையான கற்றல் சூழலை உருவாக்குவதன் மூலம், மாணவர்களின் சமூக மற்றும் மனநல வாழ்வில் அரசாங்கம் முன்னுரிமை கொண்டிருப்பதைக் காட்டுவதாக அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

இருப்பினும், நடப்பிலிருக்கும் தேர்வு அடிப்படையிலான கல்விச் சூழலை மாற்றியமைத்து, இம்மாதிரியான புதிய சூழலைக் கொண்டு வருவது கடினமான ஒன்று என அவர் ஒப்புக் கொண்டார்.

இதற்கான முயற்சிகளில் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி அமைப்புகள் மட்டுமல்லாது, பெற்றோர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கங்களும் இணைந்து பணியாற்ற வேண்டிய அவசியத்தையும் மஸ்லீ தெளிவுப்படுத்தினார்.