Home நாடு முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை குறித்து மே 21 பேசப்படும்!

முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை குறித்து மே 21 பேசப்படும்!

861
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மத்திய அரசு முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை செயல்படுத்துமா என்பது குறித்த முடிவு நாளை விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புத்ராஜெயாவில் நடைபெறும் கொவிட் -19 தேசிய பாதுகாப்பு மன்ற சந்திப்பிற்கு பிரதமர் தலைமை தாங்குவார் என்று பிரதமர் துறை அமைச்சர் தக்கியுடின் ஹசான் தெரிவித்தார்.

“அதனை பாதுகாப்பு மன்றம் கருத்தில் கொள்ள வேண்டும். நாளைக்கு சந்திப்புக் கூட்டம் நடைபெறும் போது முடிவு செய்யப்படும். இதில் பிரதமர் மற்றும் அனைத்து மந்திரி பெசார் மற்றும் முதலமைச்சர்கள் கலந்து கொள்வர். முடிவு நாளை விவாதிக்கப்படும், ” என்று அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

#TamilSchoolmychoice

முன்னதாக, முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் உட்பட பல்வேறு தரப்புகள் முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை செயல்படுத்த வேண்டும் என்று அரசாங்கத்தை வலியுறுத்தினர்.