Home நாடு “நாடாளுமன்றத்தில் அதிவிரைவு தொற்றா? ஆதாரம் காட்டுங்கள்!” லிம் கிட் சியாங் சவால்

“நாடாளுமன்றத்தில் அதிவிரைவு தொற்றா? ஆதாரம் காட்டுங்கள்!” லிம் கிட் சியாங் சவால்

657
0
SHARE
Ad

கோலாலம்பூர் : நாடாளுமன்றத்தில் அதிவிரைவில் பரவும் ஆபத்தான கொவிட் தொற்றின் திரிபு அடையாளம் காணப்பட்டிருப்பதாக சுகாதார இலாகாவின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ நூர் ஹிஷாம் அப்துல்லா அறிவித்திருந்தார்.

அதற்கான ஆதாரத்தைக் காட்டமுடியுமா என நாடாளுமன்ற உறுப்பினரும் ஜசெக ஆலோசகருமான லிம் கிட் சியாங் அவருக்கு சவால் விடுத்துள்ளார்.

“இது என்ன நாடாளுமன்ற உறுப்பினர்களை பயமுறுத்துவதற்காக செய்யப்பட்ட அறிவிப்பா? மருத்துவ ரீதியான ஆதாரங்களைக் காட்டுங்கள். இரண்டு தடுப்பூசிகளும் முழுமையாகச் செலுத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும்” என்றும் லிம் கிட் சியாங் அறைகூவல் விடுத்தார்.

#TamilSchoolmychoice

1,183 நாடாளுமன்றப் பணியாளர்களில் 11 பேர்களுக்கு மட்டுமே தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அவர்கள் அனைவருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டது என்று வைத்துக் கொண்டால் வெறும் 1 விழுக்காடு தொற்று மட்டுமே உறுதியாகியிருக்கிறது.

எனவே, இது அதிவேகமாகப் பரவும் தொற்று வகை இல்லை எனவும் லிம் கிட் சியாங் கூறினார்.