கோலாலம்பூர் : எதிர்வரும் நவம்பர் 20-ஆம் தேதி நடைபெறவிருக்கும் மலாக்கா சட்டமன்றத்திற்கான இடைத் தேர்தலில் பாஸ் கட்சி பெரிக்காத்தான் நேஷனல் சின்னத்தில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நேற்று திங்கட்கிழமை (நவம்பர் 1) நடைபெற்ற பாஸ் உச்சமன்றக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கட்சித் தலைவர் ஹாஜி ஹாடி அவாங் அறிவித்தார்.
மலாக்கா தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நவம்பர் 8-ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
ஹாடி அவாங்கின் அறிவிப்பைத் தொடர்ந்து இனியும் முவாபாக்காட் நேஷனல் என்ற அம்னோ-பாஸ் இடையிலான தேர்தல் உடன்பாடு மலாக்காவில் செயல்படுத்தப்படுமா என்ற கேள்விக் குறி எழுந்துள்ளது.
பாஸ் கட்சியின் முடிவின் மூலம் மலாக்கா தேர்தலில் கூட்டணிகளுக்கிடையிலான மும்முனைப் போட்டிகள் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது எனக் கருதப்படுகிறது.
இந்த மும்முனைப் போட்டிகளால், சாதகம் யாருக்கு, பாதகம் யாருக்கு என்பது சுவாரசியமான ஒரு கேள்வியாகும். மும்முனைப் போட்டிகள் மூலம் தேசிய முன்னணி அல்லது பக்காத்தான் ஹாரப்பான் இரண்டு கூட்டணிகளில் ஒன்று மட்டுமே வெற்றி பெறும் சாத்தியம் நிலவுவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal
மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal