Home நாடு ஊழியர் சேமநிதி (ஈபிஎப்) : திங்கட்கிழமை (ஏப்ரல் 18) முதல் 10 ஆயிரம் ரிங்கிட் விநியோகம்

ஊழியர் சேமநிதி (ஈபிஎப்) : திங்கட்கிழமை (ஏப்ரல் 18) முதல் 10 ஆயிரம் ரிங்கிட் விநியோகம்

493
0
SHARE
Ad
தெங்கு சாப்ருல்

புத்ரா ஜெயா : ஊழியர் சேமநிதி வாரிய சேமிப்பிலிருந்து சேமிப்பாளர்கள் தலா 10 ஆயிரம் ரிங்கிட் மீட்டுக் கொள்ளலாம் என அரசாங்கம் வழங்கிய வாய்ப்பைப் பயன்படுத்த இதுவரையில் சுமார் 5 மில்லியன் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

அவர்களின் விண்ணப்பங்களுக்கு ஏற்ப, நாளை திங்கட்கிழமை (ஏப்ரல் 18) முதல் சேமிப்பாளர்கள் தங்களின் சேமிப்பிலிருந்து 10 ஆயிரம் ரிங்கிட் வரை பெற்றுக் கொள்ளலாம்.

நிதி அமைச்சர் தெங்கு சாப்ருல் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.