Home நாடு “கோலகுபுபாரு இடைத் தேர்தல் புறக்கணிப்பு இந்திய சமூகத்தைப் பலவீனப்படுத்தும்” – சரவணன் வலியுறுத்துகிறார்

“கோலகுபுபாரு இடைத் தேர்தல் புறக்கணிப்பு இந்திய சமூகத்தைப் பலவீனப்படுத்தும்” – சரவணன் வலியுறுத்துகிறார்

289
0
SHARE
Ad
டத்தோஸ்ரீ எம்.சரவணன்

கோலகுபுபாரு : கோலகுபுபாரு இடைத் தேர்தலைப் புறக்கணிக்கும்
இந்திய வாக்காளர்களின் பிரச்சாரம் மலேசிய அரசியலில் நம் சமூகத்தின் நிலையை மேலும் பலவீனப்படுத்தும் என்று மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணன் எச்சரித்தார். அத்தகைய நிலைப்பாடு சமூகம் “நம்பிக்கையற்றது” என்ற கருத்தையும் உருவாக்கும் என்று சரவணன் கூறினார்.

“ஒரு வாக்காளராக, இங்கு ஆதரவளிப்பதா அல்லது அங்கு ஆதரிப்பதா என்பது குறித்து ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். புறக்கணிப்பு ஒரு நல்ல விஷயம் அல்ல, அது தவறான நிலைப்பாடு. இத்தகைய வாக்காளர்களை எந்த அரசியல் கட்சியும் நம்ப மாட்டார்கள். என்னைப் பொறுத்தவரை அரசியலில் எதிலும் ஈடுபடாமல் இருப்பது பாவம். அங்கேயோ இங்கேயோ ஒரு பக்கம் இருக்க வேண்டும். நீங்கள் இன்னும் புறக்கணிக்க விரும்பினால், சமூகம் புறக்கணிக்கப்படும், ”என்று அவர் கோலகுபுபாரு சட்டமன்றத் தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதற்கிடையில், கோலகுபுபாரு இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானுக்கு வாக்களிக்க 3,000-க்கும் மேற்பட்ட இந்திய வாக்காளர்களை மஇகா குறிவைத்துள்ளதாக சரவணன் கூறினார். “மொத்தம் 7,500 இந்திய வாக்காளர்களில் குறைந்தபட்சம் 3,000 வாக்காளர்களை இடைத்தேர்தலில் வாக்களிக்கத் தகுதியுடையவர்களைக் கொண்டு வர வேண்டும் என்பதே மஇகாவின் இலக்கு,” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

கோலகுபுபாரு மலாய் வாக்காளர்கள் (46 சதவீதம்), சீனர்கள் (30 சதவீதம்), இந்தியர்கள் (18 சதவீதம்) மற்றும் பிறர் (ஆறு சதவீதம்) எனக் கலவையான இன வாக்காளர்களைக் கொண்ட சட்டமன்றத் தொகுதியாகும்.

இந்த இடைத்தேர்தலில் கைருல் அஸ்ஹாரி சவுத் (பெரிக்காத்தான் நேஷனல்) பாங் சாக் தாவோ (பக்காத்தான் ஹாரப்பான்) இடையில் கடுமையான போட்டி நிலவுகிறது. பிஆர்எம் என்னும் பார்ட்டி ராக்யாட் மலேசியா வேட்பாளரை நிறுத்தியுள்ள நிலையில், சுயேட்சை வேட்பாளர் ஒருவர் போட்டியிடுகிறார். எனவே இங்கு 4 முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

கோலகுபுபாரு சட்டமன்ற உறுப்பினராக இருந்த லீ கீ ஹியோங் (58 வயது) மார்ச் 21 -ஆம் தேதி புற்றுநோயால் மரணமடைந்ததைத் தொடர்ந்து இந்த இடைத் தேர்தல் நடத்தப்படுகிறது.

வாக்குப்பதிவு மே 11 என்றும் மே 7 முன்கூட்டியே வாக்களிக்கும் நாள் என்றும் தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ளது.