Home உலகம் ஸ்டாலின் அமெரிக்கத் தொழிலதிபர்களுடன் சந்திப்பு

ஸ்டாலின் அமெரிக்கத் தொழிலதிபர்களுடன் சந்திப்பு

377
0
SHARE
Ad

சான் பிரான்சிஸ்கோ – அமெரிக்காவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டு சான் பிரான்சிஸ்கோ நகர் வந்தடைந்த தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ் நாட்டுக்கான தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் அமெரிக்கத் தொழிலதிபர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

ஸ்டாலின் தனது துணைவியார் மற்றும் குழுவினருடன் அமெரிக்காவுக்கு வந்திருக்கிறார். தமிழ் நாடு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவும் ஸ்டாலினுடன் அமெரிக்கா வந்திருக்கிறார்.

பல்வேறு அனைத்துலக நிறுவனங்கள் தமிழ் நாட்டில் முதலீடு செய்ய முன்வந்திருப்பதாகவும், தனது வருகையின் முதல் நாளிலேயே 900 கோடி ரூபாய்க்கான முதலீடுகளைப் பெற்றதாகவும் இதன்மூலம் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை தமிழ் நாட்டில் உருவாக்க முடியும் என்றும் ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டார்.

#TamilSchoolmychoice

இதன்மூலம், தமிழ்நாடு 1 டிரில்லியன் – அதாவது ஆயிரம் பில்லியன் டாலர் பொருளாதார மண்டலமாக மாறும் எனவும் ஸ்டாலின் தெரிவித்தார்.

அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்கள் நேற்று வியாழக்கிழமை (ஆகஸ்ட் 29)  திரளாக சான் பிரான்சிஸ்கோ விமான நிலையம் வந்து ஸ்டாலினுக்கு வரவேற்பு நல்கினர்.

தொழில்களையும், முதலீடுகளையும் ஈர்க்க வந்துள்ளதாக ஸ்டாலின் கூறினாலும் அவர் மருத்துவ பரிசோதனைகளை அமெரிக்காவில் மேற்கொள்வார் என்ற தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளன.

இந்திய வெளியுறவு அமைச்சின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் மருத்துவ காரணங்களுக்காக ஸ்டாலின் அமெரிக்கா செல்ல மத்திய அரசாங்கம் அனுமதித்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.