Home உலகம் உக்ரேனியப் படைகளுடன் வட கொரிய இராணுவப் படைகள் மோதல்!

உக்ரேனியப் படைகளுடன் வட கொரிய இராணுவப் படைகள் மோதல்!

73
0
SHARE
Ad
விளாடிமிர் செலன்ஸ்கி

கீவ் (உக்ரேன்) : உக்ரேனுடன் போரில் ஈடுபட்டிருக்கும் ரஷியாவுக்கு ஆதரவாக வட கொரிய இராணுவம் அணிவகுத்து, தற்போது ரஷியாவின் குர்ஸ்க் பகுதியில் நிறுத்தப்பட்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வட கொரிய இராணுவம் உக்ரேனியப் படைகளுடன் மோதலில் ஈடுபட்டிருப்பதாக உக்ரேன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்த மோதல்களைத் தொடர்ந்து உயிருடற் சேதங்களும் ஏற்பட்டிருப்பதாக செலன்ஸ்கி கூறினார். எனினும் எந்தத் தரப்பு இராணுவத்தினர் மரணமடைந்தனர் என்பதை அவர் உறுதிப்படுத்தவில்லை.

சுமார் 11 ஆயிரம் வட கொரிய இராணுவப் படையினர் குர்ஸ்க் வட்டாரத்திலும் எல்லைப் பகுதிகளிலும் குவிக்கப்பட்டிருப்பதாகவும் செலன்ஸ்கி குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதால் உக்ரேன் போரை அவர் எவ்வாறு கையாளப் போகிறார் என்ற ஆர்வமும் அரசியல் பார்வையாளர்களிடையே எழுந்துள்ளது.