Home நாடு இஸ்மாயில் சாப்ரி ஊழல் தடுப்பு ஆணையத்தில் வாக்குமூலம்!

இஸ்மாயில் சாப்ரி ஊழல் தடுப்பு ஆணையத்தில் வாக்குமூலம்!

387
0
SHARE
Ad
இஸ்மாயில் சப்ரி யாக்கோப் – கோப்புப் படம்

புத்ரா ஜெயா: ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டபடி இன்று வெள்ளிக்கிழமை (மார்ச் 13) காலை தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்க  முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி ஊழல் தடுப்பு ஆணையம் வந்தார்.

அவரின் கார் 9.45 மணியளவில் ஊழல் தடுப்பு ஆணைய வளாகத்தில் நுழைந்ததாக ஊடகங்கள் தெரிவித்தன.

ஏற்கனவே வாக்குமூலம் வழங்க அவர் அழைக்கப்பட்டிருந்தாலும், அவர் மருத்துவ விடுப்பு காரணமாக, வாக்குமூலம் வழங்குவதை ஒத்தி வைத்தார்.

#TamilSchoolmychoice

ஊழல் தடுப்பு ஆணையம் முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சாப்ரியுடன் தொடர்புடைய பாதுகாப்பு இல்லத்தில் நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட RM177 மில்லியன் பணம் மற்றும் தங்கம் குறித்து விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளது.

இஸ்மாயில் சாப்ரியின் முன்னாள் உதவியாளர்கள் உள்ளிட்ட பதிமூன்று வங்கிக் கணக்குகள் இதுவரை முடக்கப்பட்டுள்ளன.

இஸ்மாயில் சாப்ரி பிரதமராக தலைமை வகித்த அரசாங்கத்தின் “மலேசியா குடும்பம்” விளம்பரப் பிரச்சாரத்திற்கான செலவினம் குறித்த ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணையில் முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் சந்தேக நபராக உள்ளார் என ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் அசாம் பாக்கி ஏற்கனவே அறிவித்திருந்தார்.

அசாமின் கூற்றுப்படி, இதுவரை 30-க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணையாளர்கள் வாக்குமூலம் பெற்றுள்ளனர். இதில் பல அரசியல்வாதிகளும் அடங்குவர். ஆனால் அவர்களின் அடையாளங்களை அசாம் இதுவரை விவரிக்கவில்லை.

ஊழல் தடுப்பு ஆணையம் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட இஸ்மாயில் சாப்ரியின் முன்னாள் உதவியாளர்களுக்கு சொந்தமான கணக்குகள் உட்பட மொத்தம் சுமார் RM2 மில்லியன் கொண்ட 13 வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளதாக அசாம் பாக்கி தெரிவித்திருந்தார்.

இருப்பினும், ஊழல் தடுப்பு ஆணையம் இன்னும் இஸ்மாயில் சாப்ரியின் வங்கிக் கணக்குகளை முடக்கவில்லை. மேலும் அவரது அனைத்து வங்கிக் கணக்குகளையும் முதலில் விளக்கும்படி இஸ்மாயில் சாப்ரியிடம் கேட்க விரும்புவதாக அசாம் தெரிவிதிருந்தார்.