Home நாடு சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் யுனேஸ்வரன் பிகேஆர் தேர்தலில் தோல்வி!

சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் யுனேஸ்வரன் பிகேஆர் தேர்தலில் தோல்வி!

58
0
SHARE
Ad
ஆர்.யுனேஸ்வரன்

ஜோகூர் பாரு: இன்று ஞாயிற்றுக்கிழமை ஜோகூர் மாநிலத்திற்கான பிகேஆர் தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்றன. தெப்ராவ் தொகுதியின் தலைவராக இருந்து வந்த சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.யுனேஸ்வரன் மும்முனைப் போட்டியில் தோல்வியடைந்தார்.

சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினரான யுனேஸ்வரன் தெப்ராவ் பிகேஆர் தொகுதியின் தலைவராக செயலாற்றி வந்தார். அவரின் தோல்வி பிகேஆர் வட்டாரங்களில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான, பி.பிரபாகரன் பத்து தொகுதித் தலைவருக்கான போட்டியில் தோல்வி கண்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

#TamilSchoolmychoice

நடப்புத் தலைவரான அவருக்கு 589 வாக்குகள் கிடைத்த வேளையில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிரகாஷ் மணியம் 691 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார்.

மற்றொரு வேட்பாளரான ஜிம்மி புவா 560 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.