Home உலகம் சோமாலியாவில்  23 ஆண்டுகள் கழித்து அமெரிக்க தூதரகம் திறப்பு!  

சோமாலியாவில்  23 ஆண்டுகள் கழித்து அமெரிக்க தூதரகம் திறப்பு!  

545
0
SHARE
Ad

somaliyaமொகடிஷூ, ஜூன் 5 – சோமாலியா என்றவுடன் நமது நினைவுக்கு வருவது கடும் பஞ்சமும், கடற்கொள்ளையர்களும் தான். மிகவும் பின்தங்கிய நாடான சோமாலியா பெரும்பாலான வளர்ந்த நாடுகளின் தொடர்புகளிலிருந்து அந்நியப்பட்டே இருந்து வருகின்றது. சமீபத்தில் ஐநா அமைப்பு அங்கு நிலைமையை சீர் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது.

இந்நிலையில், அமெரிக்காவுடனான கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 23 ஆண்டுகளாக அங்கு அமெரிக்க தூதரகம் செயல்படாமல் இருந்தது. தற்போது இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளில் ஏற்பட்டு வரும் முன்னேற்றம் காரணமாக 23 ஆண்டுகள் கழித்து சோமாலியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மீண்டும் திறக்கப்பட்டது.

சோமாலியா நாட்டில் காணப்படும் அரசியல் முன்னேற்றங்களை அடுத்து விரைவில் அங்கு அமெரிக்க தூதர் நியமிக்கப்படுவார் என அமெரிக்க அரசியல் விவகாரத்துறை செயலாளர் வெண்டி ஷேர்மேன் தெரிவித்துள்ளார். மேலும் சோமாலியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் அமெரிக்கா தனது கவனத்தை தொடர்ந்து செலுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.