Home உலகம் இன்னும் மூன்றே மாதத்தில் அரசியலுக்கு முழுக்கு: ராஜபக்சே சோக முடிவு!

இன்னும் மூன்றே மாதத்தில் அரசியலுக்கு முழுக்கு: ராஜபக்சே சோக முடிவு!

721
0
SHARE
Ad

Tamil_News_large_1038644கொழும்பு – அதிபர் தேர்தலிலும் பிரதமர் தேர்தலிலும் படுதோல்வியைச் சந்தித்த ராஜபக்சே இன்னும் மூன்று மாதத்திற்குள் அரசியலுக்கு முழுமையாக முழுக்குப் போட உள்ளதாகக் கூறியுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் படுதோல்வி அடைந்த ராஜபக்சே, பிரதமர் தேர்தலில் போட்டியிட்டு இலங்கைக்குப் பிரதமராகவாவது வரலாம் என மனப்பால் குடித்தார்.

பெரும்பான்மையாக வெற்றி பெற்றாலும் அவரைப் பிரதமராக நியமிக்கப்போவதில்லை என அதிபர் சிறிசேனா திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்.

#TamilSchoolmychoice

எனினும், ராஜபக்சே பெரும்பான்மையாக வெற்றி பெற முடியவில்லை. ரணில் விக்கிரமசிங்கே வெற்றி பெற்று மீண்டும் பிரதமராகப் பதவியேற்றார்.

அந்தக் கனவு தான் பலிக்கவில்லை; எதிர்க்கட்சித் தலைவராகவாவது வரலாம் என எண்ணினார்.

திடீரென ரணிலும் சிறிசேனாவும் கூட்டுச் சேர்ந்து தேசிய அரசு அமைக்க முன்வர, எதிர்க்கட்சித் தலைவர் கனவும் பலிக்காமல் போனது.

இதையடுத்து ராஜபக்சே மீது இனப்படுகொலை விசாரணை தொடங்கிக் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற பேச்சு எழுந்தது.

அதை நிரூபிக்கும் வகையில் அவரது மகன் மீது சொத்துக் குவிப்பு விசாரணை தொடங்கப்பட்டது.

இந்நிலையில்  அதிபர் சிறிசேனாவைச் சந்தித்த மகிந்த ராஜபக்சே, “என் மீது எந்த ஒரு கடும் நடவடிக்கையும் எடுக்க உத்தரவிட வேண்டாம். இன்னும் 3 மாதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்துவிட்டு முழுமையாக அரசியலில் இருந்தே வெளியேறிவிடுவேன்” எனக் கூறியதாகக் கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனால் இலங்கையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.