Home இந்தியா குஜராத்தில் தொடர்ந்து பதற்றம்: போராட்டத்தைத் தீவிரப்படுத்த முடிவு!

குஜராத்தில் தொடர்ந்து பதற்றம்: போராட்டத்தைத் தீவிரப்படுத்த முடிவு!

489
0
SHARE
Ad

timthumbஅகமதாபாத்- குஜராத்தில் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி படேல் சமூகத்தினர் நடத்திய வன்முறைப் போராட்டத்தில் பலியானோரின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

தொடர்ந்து மூன்றாவது நாளாகக் குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் பதற்றம் நீடித்து வருகிறது.

ஆகையால் ஊரடங்கு உத்தரவும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

மேலும், சட்டம்–ஒழுங்கைச் சீரமைக்க பல்வேறு பகுதிகளில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

வன்முறையாளர்கள் பல இடங்களில் ரெயில் தண்டவாளங்களைத் தகர்த்து விட்டதால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 12 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், 19 ரயில்களின் சேவை பாதியாகக் குறைக்கப்பட்டிருக்கிறது.

எனினும் சாலைப் போக்குவரத்தில் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படவில்லை.

இந்நிலையில், குஜராத்தில், இடஒதுக்கீடு கோரி நடத்தி வரும் போராட்டத்தைத் தீவிரப்படுத்தப் போவதாகப் போராட்டக் குழுத் தலைவர் ஹர்திக் படேல் எச்சரித்துள்ளார்.

இப்போராட்டத்தின் தொடர்ச்சியாகக் காய்கறிகள், பால் போன்ற அத்தியாவசியப் பொருட்களை விநியோகம் செய்வதை நிறுத்துமாறு படேல் இன விவசாயிகளை ஹர்திக் படேல் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆகையால், எப்போது வேண்டுமானாலும் மீண்டும் வன்முறை வெடிக்கும் அபாயம் உள்ளது.