Home Featured நாடு அன்வார் உடல்நிலை மோசமடையவில்லை – பெபாஸ் அன்வார் தகவல்!

அன்வார் உடல்நிலை மோசமடையவில்லை – பெபாஸ் அன்வார் தகவல்!

648
0
SHARE
Ad

Anwarகோலாலம்பூர் – முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் உடல்நிலை மோசமான நிலைக்குச் செல்லவில்லை என்றும், அவர் இயல்பான நிலையில் தான் இருக்கிறார் என்றும் பெபாஸ் அன்வார் இயக்கம் தெரிவித்துள்ளது.

நேற்று அன்வாருக்கு இரத்த அழுத்தம் இயல்பாக இல்லாமல் உயர்ந்து காணப்பட்டுள்ளது.

என்றாலும், சுங்கை பூலோ சிறைச்சாலையிலுள்ள மருத்துவ மையத்தில் அதைக் கட்டுப்படுத்தத் தேவையான வசதிகள் இல்லாத காரணத்தால், பிற்பகல் 3 மணியளவில் அவர் சுங்கை பூலோ சிறைச்சாலையிலிருந்து கோலாலம்பூர் பெரிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்றும் பெபாஸ் அன்வார் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

முன்னதாக, அவருக்கு வழங்கப்பட்டு வந்த இரத்த அழுத்த மருந்துகள் சரியான முறையில் பயன்தராத காரணத்தால் அவரது இரத்த அழுத்தம் உயர்ந்து காணப்பட்டுள்ளது என்றும் பெபாஸ் அன்வார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கோலாலம்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அன்வாரை, இன்று அவரது மனைவியும், பிகேஆர் தலைவருமான டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் பார்வையிட்டார்.

நேற்று இரவு அன்வாரின் வழக்கறிஞரும், சுபாங் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.சிவராசா தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட தகவலில், அன்வார் உடல்நிலை மோசமடைந்துள்ளது என்றும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.