Home Featured நாடு சுங்கை பெசாரில் பிகேஆர் – கோலகங்சாரில் அமானா – மும்முனைப் போட்டிகள்!

சுங்கை பெசாரில் பிகேஆர் – கோலகங்சாரில் அமானா – மும்முனைப் போட்டிகள்!

682
0
SHARE
Ad

Malaysia-Parliamentகோலாலம்பூர் – எதிர்வரும் ஜூன் 18ஆம் தேதி நடைபெறவிருக்கும் சுங்கை பெசார், கோலகங்சார் நாடாளுமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்களில் மும்முனைப் போட்டிகள் ஏற்படக் கூடிய சூழல்கள் ஏற்பட்டுள்ளதாக அரசியல் ஆரூடங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்த இடைத் தேர்தலில் தாங்கள் எடுக்கப்போகும் முடிவை நாளை அறிவிக்கப் போவதாக பக்காத்தான் ஹாராப்பான் தெரிவித்துள்ளது.

பாஸ் கட்சிக்கும் பக்காத்தான் ஹாராப்பான் கூட்டணிக்கும் இணக்கம் ஏற்படக் கூடிய வாய்ப்பில்லை என்ற காரணத்தால், சுங்கை பெசார் தொகுதியில் பிகேஆர் கட்சி போட்டியிட ஆயத்தமாகி வருவதாகவும், பேராக் மாநிலத்தின் கோலகங்சார் தொகுதியில் பாஸ் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற தலைவர்களைக் கொண்ட கட்சியான பார்ட்டி அமானா நெகாரா கட்சியின் சார்பிலான வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்றும் தெரிகின்றது.

#TamilSchoolmychoice

இதனைத் தொடர்ந்து, சுங்கை பெசார் தொகுதியில் தேசிய முன்னணி, பிகேஆர், பாஸ் என மும்முனைப் போட்டியும், கோலகங்சார் தொகுதியில் தேசிய முன்னணி, அமானா, பாஸ் என மும்முனைப் போட்டி ஏற்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.