Home நாடு ‘பிரதமர் கிட் சியாங்’ பிரச்சாரம் மூலம் பிளவை ஏற்படுத்த அம்னோ முயற்சி: இராமசாமி

‘பிரதமர் கிட் சியாங்’ பிரச்சாரம் மூலம் பிளவை ஏற்படுத்த அம்னோ முயற்சி: இராமசாமி

968
0
SHARE
Ad

Ramasamy-penang-deputy-cmகோலாலம்பூர் – ஜசெக கட்சிக்கும், பக்காத்தான் ஹராப்பானில் உள்ள மலாய் கட்சிகளுக்கும் இடையில் குழப்பத்தை ஏற்படுத்த அம்னோ முயற்சி செய்வதாக பினாங்கு துணை முதல்வர் 2 பி.இராமசாமி குற்றம்சாட்டியிருக்கிறார்.

எதிர்கட்சி வெற்றி பெற்றால், லிம் கிட் சியாங் பிரதமராவார் என்ற பிரச்சாரத்தை அம்னோ பயன்படுத்தி வருவதாகவும் இராமசாமி குறிப்பிட்டிருக்கிறார்.

லிம் கிட் சியாங்கைப் பயன்படுத்தி, பக்காத்தான் ஹராப்பானில் இனம் மற்றும் மதவாதப் பிரிவினைகளை ஏற்படுத்தி அம்னோ பயனடையப் பார்ப்பதாகவும் இராமசாமி தெரிவித்திருக்கிறார்.