Home நாடு பினாங்கை உலுக்கிய விபத்து: 8 பேர் பலி! 42 பேர் காயம்!

பினாங்கை உலுக்கிய விபத்து: 8 பேர் பலி! 42 பேர் காயம்!

717
0
SHARE
Ad

Penangaccidentபட்டர்வர்த் – நேற்று செவ்வாய்க்கிழமை ஜுரு சுங்கச் சாவடி அருகே, தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற இரு பேருந்துகள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டதில் 8 பேர் பலியாகினர். 42 பேர் காயமடைந்தனர்.

அவர்களில் 4 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

பினாங்கை உலுக்கிய இச்சம்பவத்தை, விசாரணை செய்து வரும் காவல்துறையினர், ஓட்டுநர் இருவரையும் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.