Home நாடு தமிழ்ப் பள்ளிகளுக்கான வாரியங்களின் 2-வது மாநாடு!

தமிழ்ப் பள்ளிகளுக்கான வாரியங்களின் 2-வது மாநாடு!

1158
0
SHARE
Ad

upsi-logo-தஞ்சோங் மாலிம் – மலேசியாவிலுள்ள தமிழ்ப் பள்ளிகளின் மேலாளர்களின் வாரியங்களுக்கான கருத்தரங்கம் 2-வது ஆண்டாக இன்று வெள்ளிக்கிழமை தொடங்கி தஞ்சோங் மாலிம் நகரிலுள்ள சுல்தான் இட்ரிஸ் கல்வி பல்கலைக் கழகத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (4 பிப்ரவரி 2018) வரை நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் மேலாளர் வாரிய உறுப்பினர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் என சுமார் 400 பங்கேற்பாளர்கள் கலந்து கொள்கின்றனர். இந்தக் கருத்தரங்கில் கல்வி துணை அமைச்சர் டத்தோ ப.கமலநாதனும் கலந்து கொள்கிறார்.

செடிக் எனப்படும் பிரதமர் துறையின் கீழ் செயல்படும் இந்தியர்களுக்கான சமூக, பொருளாதார மேம்பாட்டு இலாகாவின் தலைமை இயக்குநர் முனைவர் டத்தோ என்.எஸ்.இராஜேந்திரனும் பங்கு பெறுகிறார்.