Home நாடு இன்ஸ்டாகிராமில் இணைந்தார் மகாதீர்!

இன்ஸ்டாகிராமில் இணைந்தார் மகாதீர்!

941
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான துன் டாக்டர் மகாதீர் முகமது இன்று வியாழக்கிழமை, chedetofficial என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் இணைந்தார்.

ஏற்கனவே, டுவிட்டர், பேஸ்புக், வலைப்பூ உள்ளிட்ட நட்பு ஊடகங்களில் மக்களோடு உரையாடி வந்த மகாதீர், தற்போது இன்ஸ்டாகிராமிலும் இணைந்து இளைஞர்களோடு மேலும் நெருக்கமாகவிருக்கிறார்.

தனது மனைவி துன் டாக்டர் சித்தி ஹாஸ்மாவும், தானும் புன்னகைத்தவாறு நிற்கும் புகைப்படம் ஒன்றை முதல் பதிவாக வெளியிட்டிருக்கும் மகாதீர், “இன்று நான் எனது மனைவியுடன் ஹாஸ்மாவுடன் இன்ஸ்டாகிராமில் இணைகின்றேன். எனது மனைவிக்கு 62 வயதாகிறது. எப்போதும் என்னோடு இருப்பவர். மருத்துவர்களாகிய எங்களுக்கு புன்னகை தான் சிறந்த மருந்து” என்று மகாதீர் தனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice