Home நாடு சபா இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் தாபிக் காலமானார்!

சபா இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் தாபிக் காலமானார்!

749
0
SHARE
Ad

கோத்தா கினபாலு – சபா இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டத்தோ தாபிக் அபு பக்கார் திதிங்கான் (வயது 56) நேற்று புதன்கிழமை இரவு உடல்நலக்குறைவால் காலமானார்.

நீண்ட நாட்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்த டத்தோ தாபிக் நேற்று இரவு 11.57 மணியளவில், கோலாலம்பூர் பிரின்ஸ் கோர்ட் மருத்துவமனையில் மரணமடைந்தார்.

இந்நிலையில், தௌபிக்கின் சகோதரர் டத்தோ நிஜாம் வெளியிட்டிருக்கும் தகவலில், தனது சகோதரரின் நல்லுடல் இன்று வியாழக்கிழமை தவாவ் கொண்டு செல்லப்பட்டு அங்கு இறுதிச்சடங்குகள் நடைபெற்று நல்லடக்கம் செய்யப்படும் எனத் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

அபாஸ் சட்டமன்ற உறுப்பினரான தாபிக், தவாவ் தொகுதி அம்னோ தலைவராகவும் செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.