Home நாடு புக்கிட் மெலாவத்தி: மைகார்டு பிரச்சினையால் சிவமலருக்குப் பதிலாக ஜவாரியா சுல்கிப்ளி போட்டி!

புக்கிட் மெலாவத்தி: மைகார்டு பிரச்சினையால் சிவமலருக்குப் பதிலாக ஜவாரியா சுல்கிப்ளி போட்டி!

1265
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பிகேஆர் சார்பில் புக்கிட் மெலாவத்தி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடவிருந்த பிகேஆர் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவமலர் கணபதியின் அடையாள அட்டை பிரச்சினையால், இறுதி நேரத்தில் அவர் வேட்புமனுத் தாக்கல் செய்ய முடியாதல் நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து, சிவமலர் கணபதிக்குப் பதிலாக அத்தொகுதியில் ஜவாரியா சுல்கிப்ளி வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

இதனை, கோல சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அமனா வியூக இயக்குநர் டாக்டர் சுல்கிப்ளி அகமட் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

பகாங் மாநிலத்தைச் சேர்ந்த சிவமலர் கணபதி, தனது அடையாள அட்டையிலுள்ள பகாங் முகவரியை சிலாங்கூருக்கு மாற்றவில்லை என்பதால் அவரால் சிலாங்கூரில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.