Home நாடு 116 மில்லியன் எங்களுடையது – அம்னோ கோருகிறது

116 மில்லியன் எங்களுடையது – அம்னோ கோருகிறது

957
0
SHARE
Ad

கோலாலம்பூர் – 1 எம்டிபி விசாரணைகளின் ஒரு பகுதியாக, முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் தொடர்புடைய இல்லங்களில் கைப்பற்றப்பட்ட 116.7 மில்லியன் ரிங்கிட் ரொக்கம் அம்னோவுக்குச் சொந்தமானது என அந்தக் கட்சி காவல் துறைக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

அம்னோவின் வழக்கறிஞர்கள் காவல் துறைக்கு அனுப்பியுள்ள அந்தக் கடிதத்தில், நஜிப் தொடர்புடைய இல்லங்களில் கைப்பற்றப்பட்ட பணத்துக்கும் 1எம்டிபி விவகாரத்துக்கும் தொடர்பில்லை என்றும் கூறியுள்ளது. அடுத்த 7 நாட்களுக்குள் காவல் துறையினர் தாங்கள் கேட்டுள்ள ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அம்னோவின் வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த மே மாதத்தில் நஜிப் தொடர்பு பெவிலியன் ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்புகளில் இருந்து ரொக்கப் பணமும், ஏராளமான ஆபரணங்களும் கைப்பற்றப்பட்டன.