Home நாடு லோக்மான் நூர் அடாம் : சுங்கை காண்டிஸ் அம்னோ வேட்பாளர்

லோக்மான் நூர் அடாம் : சுங்கை காண்டிஸ் அம்னோ வேட்பாளர்

1192
0
SHARE
Ad

ஷா ஆலாம் — எதிர்வரும் ஆகஸ்ட் 4-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் சுங்கை காண்டிஸ் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் போட்டியிட அம்னோ உச்சமன்ற உறுப்பினர் லோக்மான் நூர் அடாம் (படம்) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் கனல் தெறிக்கும் மேடைப் பேச்சுகளை ஆற்றுவதில் வல்லமை வாய்ந்தவராகக் கருதப்படுகிறார்.

மே 9 பொதுத் தேர்தலுக்குப் பின்னர் “புதிய மலேசியாவுக்கான கண்காணிப்பு” என்ற பெயரில் இயக்கம் ஒன்றை உருவாக்கி தொடர்ந்து நடப்பு அரசாங்கத்துக்கு எதிராக எதிர்ப்புக் குரல்களைப் பதிவு செய்து வருகிறார்.

பிகேஆர் கட்சி சார்பாகப் போட்டியிட முகமட் சவாவி அகமட் முக்னி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் தாபிஸ் அல் பாத்தே ஜாலான் கெபுன் எனப்படும் இஸ்லாமிய மதப் பள்ளியின் தலைமையாசிரியர் ஆவார்.

#TamilSchoolmychoice

பிகேஆர் கட்சியின் சுங்கை காண்டிஸ் சட்டமன்ற உறுப்பினர் மாட் சுகைமி ஷாபி (வயது 50) கடந்த ஜூலை 2-ஆம் தேதி உடல் நலக் குறைவால் எதிர்பாராதவிதமாக காலமானதைத் தொடர்ந்து இந்த இடைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

அவரது மறைவைத் தொடர்ந்து மே 9 பொதுத் தேர்தலுக்குப் பின்னர் நடைபெறும் முதல் இடைத் தேர்தலாக சுங்கை காண்டிஸ் சட்டமன்றத்துக்கான இடைத் தேர்தல் அமையவிருக்கிறது.

கோத்தா ராஜா நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் இந்த சுங்கை காண்டிஸ் சட்டமன்றம் அமைந்திருக்கிறது.