Home நாடு ஸ்ரீ செத்தியா : பாஸ் கட்சிக்கு அம்னோ விட்டுக் கொடுக்கிறது

ஸ்ரீ செத்தியா : பாஸ் கட்சிக்கு அம்னோ விட்டுக் கொடுக்கிறது

785
0
SHARE
Ad

கோலாலம்பூர் – ஸ்ரீ செத்தியா சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர் ஷாஹாருடின் படாருடின் நேற்று காலமானதைத் தொடர்ந்து அங்கு நடைபெறவிருக்கும் இடைத் தேர்தலில் அம்னோ போட்டியிடாமல் பாஸ் கட்சிக்கு விட்டுக் கொடுக்கும். இதன் மூலம் அந்த இரு கட்சிகளுக்கும் இடையிலான மறைமுக உடன்பாடு மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சுங்கை காண்டிஸ் சட்டமன்றத் தொகுதியில் அம்னோ போட்டியிட பாஸ் விட்டுக் கொடுத்த தியாகத்திற்குப்  பிரதிபலனாக அம்னோ இந்த பதில் நடவடிக்கையை எடுத்துள்ளது என அம்னோ துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் தெரிவித்துள்ளார்.