கோலாலம்பூர் – சர்ச்சையாகியிருக்கும் மாயமான 18 பில்லியன் ரிங்கிட் ஜிஎஸ்டி வசூல் குறித்து இன்று ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் கருத்துரைத்த துன் மகாதீர் அந்தப் பணம் காணாமல் போகவில்லை எனக் கூறுபவர்கள் அந்தப் பணம் எங்கிருக்கிறது என்பதைக் கண்ணில் காட்ட வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
லிம் குவான் எங் முதன் முதலில் அந்த விவகாரத்தை பகிரங்கமாக்கியதைத் தொடர்ந்து, நஜிப் அந்தப் பணம் அரசாங்கக் கணக்கில்தான் இருக்கிறது என்று தற்காத்துப் பேசியிருந்தார்.
“அந்தப் பணம் காணாமல் போகவில்லை என்றால் அந்தப் பணம் எங்கிருக்கிறது என சம்பந்தப்பட்டவர்கள் கூறவேண்டும்” என மகாதீர் கூறியிருக்கிறார்.