Home நாடு 13.16 மில்லியன் – ‘மலேசியா’ வரிசை வாகன எண்களின் மூலம் வருமானம்

13.16 மில்லியன் – ‘மலேசியா’ வரிசை வாகன எண்களின் மூலம் வருமானம்

791
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மலேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு ‘மலேசியா’ (MALAYSIA) என்ற எண்வரிசை கொண்ட சிறப்பு வாகன எண்கள் அண்மையில் ஏலத்தில் விடப்பட்டன. இதில் 2020 என்ற எண் மட்டும் பிரத்தியேகமாக பிரதமர் துன் மகாதீருக்கு வழங்கப்பட்டு மற்ற எண்கள் ஏலத்திற்கு விடப்பட்டன.

இந்தப் புதிய எண்களின் மூலம் 13.16 மில்லியன் ரிங்கிட் அரசாங்கத்திற்கு வருமானம் கிடைத்திருப்பதாக, போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் அறிவித்தார்.