கோலாலம்பூர் – முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் மற்றும் அவரது துணைவியார் ரோஸ்மா மன்சோர் ஆகியோர் தனக்கு 20 மில்லியன் தரவேண்டும் என்று கோரி தரைவிரிப்புக் கம்பள வணிகர் தீபக் ஜெய்கிஷன் வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளார்.
தீபக் ஜெய்கிஷன், அவரது சகோதரர் ராஜேஷ் ஜெய்கிஷன் மற்றும் அவர்களுடைய நிறுவனமான ரேடியண்ட் ஸ்பெலெண்டர் சென்டிரியான் பெர்ஹாட் ஆகிய மூன்று தரப்புகளும் இணைந்து 52.6 மில்லியன் தொடர்புடைய இந்த வழக்கைத் தொடுத்திருக்கின்றனர்.
கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி தொடுக்கப்பட்ட இந்த வழக்கில் நஜிப், ரோஸ்மா, நஜிப் சகோதரர் அகமட் ஜோகாரி ரசாக், தபோங் ஹாஜி எனப்படும் ஹஜ் யாத்திரிகர்களுக்கான நிதி வாரியம், பேங்க் ராயாட் தலைவர் ஷூக்ரி முகமட் சாலே ஆகியோரை பிரதிவாதிகளாக தீபக் ஜெய்கிஷன் தரப்பினர் பெயர் குறிப்பிட்டுள்ளனர்.
ஓர் அடுக்குமாடிக் கட்டுமானம் தொடர்பில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.