Home நாடு பிடிபிடிஎன்: கடனைச் திருப்பிச் செலுத்த 2,000 சம்பள வரம்பு நிர்ணயம்

பிடிபிடிஎன்: கடனைச் திருப்பிச் செலுத்த 2,000 சம்பள வரம்பு நிர்ணயம்

854
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 2019-ம் ஆண்டு தொடக்கத்திலிருந்து தேசிய உயர்க் கல்வி கடனுதவி திட்டத்தின் (PTPTN) வழி பயனடைந்தோர், மாத சம்பளமாக 2,000 ரிங்கிட் மற்றும் அதற்கும் மேல் பெறுவார்கள் எனில், மாதாந்திர அடிப்படையில் அந்தக் கடன் திரும்ப வசூலிக்கப்படும் எனக் கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லீ மாலிக் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் தற்போதைய நிதிச் சூழலை கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டதாகவும், நிதியின் நிலைமை முன்னேற்றம் அடைந்தால் 4,000 ரிங்கிட் சம்பள வரம்பை நடைமுறைப்படுத்த முயற்சிகள் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் இது குறித்து நேற்று செவ்வாய்க்கிழமை  (நவம்பர் 27) துணைக் கல்வியமைச்சர், தியோ நீ சிங் இம்முடிவினை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தியோவின் கூற்றுப்படி, கடந்த வெள்ளியன்று (நவம்பர் 23),  2,000 ரிங்கிட்டுக்கும் மேற்பட்ட வருமானத்தைப் பெறுபவர்களிடத்தில் அதிகபட்சமாக 2 விழுக்காடு அல்லது  40 ரிங்கிட் மாதாந்திரத் தொகையாகப் பெறப்படும் என அக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

முதல் வகுப்பு மதிப்பெண்களைப் பெற்ற, நடுத்தர வருமானம் (M40) பெறக்கூடிய மாணவர்கள் மற்றும் அடிமட்ட வருமானம் (B40) பெறக்கூடிய மாணவர்களின் கடன்களை விலக்குவதற்கு அமைச்சரவை ஒப்புக் கொண்டது என அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.