கோலாலம்பூர்: மலேசியாவில் உள்ள இந்திய சமூகத்திற்கு தனது அன்பை வெளிப்படுத்திய அம்னோவின் மூத்தத் தலைவர் தாஜூடின் அப்துல் ரஹ்மான், தம்மை ஒரு “தீவிர இந்தியன்” என்று அடையாளப்படுத்தி, நாடாளுமன்றத்தில் இன்று பரபரப்பினை ஏற்படுத்தினார்.
தமது பாசிர் சாலாக் தொகுதியில் தமிழ்ப் பள்ளியின் நிலைப்பாடு குறித்த கேள்வியின் போது தாஜூடின் இவ்வாறு கல்வியமைச்சரிடம் கூறினார். முன்னதாக, அவரது தொகுதியில் தமிழ்ப் பள்ளியை நிறுவ இருந்ததாகவும், அவ்வாறு செய்வதற்கான திட்டங்கள் தற்பொழுது பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தாஜூடின் கூறினார்.
அவரின் இக்கூற்றினைக் கேட்ட இதர நாடாளுமன்ற உறுப்பினர்கள் நகைக்கத் தொடங்கினர்.
“நான் இந்தியர்களுக்கு எமது தொகுதியில் நிறைய உதவியிருக்கிறேன், ஆனால், அவர்களுக்கு இது குறித்து தெரியவில்லை” என்றார் தாஜூடின்.
தாஜூடினின் அக்கேள்விக்கு பதில் அளித்த கல்வி அமைச்சர், இது குறித்து தனது கருத்தில் கொள்வதாகக் கூறினார்.