Home நாடு சாஹிட் : அம்னோ தலைவர் பதவியைத் துறக்காமல் விடுமுறையில் செல்கிறார்

சாஹிட் : அம்னோ தலைவர் பதவியைத் துறக்காமல் விடுமுறையில் செல்கிறார்

1115
0
SHARE
Ad

கோலாலம்பூர் – அம்னோவின் தேசியத் தலைவர் பதவியிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும் என நெருக்குதல் அதிகரித்து வரும் வேளையில், அந்த அறைகூவல்களுக்கு பணிந்து விட மாட்டேன் எனத் தொடர்ந்து கூறிவந்த அகமட் சாஹிட் ஹமிடி, விடுமுறையில் செல்லப் போவதாக அறிவித்திருக்கிறார்.

அம்னோ தேசியத் தலைவர் பதவியிலிருந்து தான் விலகவில்லை என்றும் மாறாக, தலைவர் பொறுப்புகளை கட்சியின் துணைத் தலைவர் முகமட் ஹசான் வசம் ஒப்படைத்து விட்டு, விடுமுறையில் மட்டும் செல்வதாகவும் சாஹிட் அறிவித்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து இனி அம்னோவின் இடைக்காலத் தலைவராக முன்னாள் நெகிரி செம்பிலான் மாநில மந்திரி பெசாரான முகமட் ஹசான் செயல்படுவார்.