கோலாலம்பூர்: அம்னோ கட்சியின் உச்ச மன்ற உறுப்பினர் டத்தோ லொக்மான் நூர் நேற்று தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டார்.
பெமந்தாவ் மலேசியா பாரு (Pemantau Malaysia Baru) அமைப்பின் தலைவருமான அவர் புக்கிட் அமான் தலைமையகத்தில், சட்டவிரோத பேரணிகளை நடத்தியதற்காகவும், மக்களை தூண்டும் விதமாகப் பேசியதற்காகவும் கைது செய்யப்பட்டார்.
தேச நிந்தனைச் சட்டம் 4(1) பிரிவின் கீழ் லொக்மான் விசாரிக்கப்படுவார். ஆயினும், இக்கைது குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கைகள் காவல் துறையிடம் இருந்து இன்னும் பெறப்படவில்லை.