Home நாடு சுல்தான் இப்ராகிம், மகாதீர் இருவருக்கிடையில் இனி ஒளிவு மறைவு கிடையாது!

சுல்தான் இப்ராகிம், மகாதீர் இருவருக்கிடையில் இனி ஒளிவு மறைவு கிடையாது!

774
0
SHARE
Ad

ஜோகூர் பாரு: பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட், நேற்று (வியாழக்கிழமை) மரியாதை நிமித்தமாக ஜோகூர் சுல்தானைச் சந்தித்தார். 90 நிமிடங்களுக்கு நீடித்த அச்சந்திப்பில், பல்வேறு விவகாரங்கள் பேசப்பட்டதாகவும், ஆயினும் அவற்றை குறித்துத் தெரிவிக்க வேண்டியதில்லை எனவும் பிரதமர் செய்தியாளர்களிடம் கூறினார்.

அச்சந்திப்பின் போது, பிரதமரும், சுல்தானும், ஒருவரோடு ஒருவர் வெளிப்படையாக இருப்பதற்கு ஒப்புக் கொண்டதாக மகாதீர் கூறினார்.

#TamilSchoolmychoice

எதிர்காலத்தில் எந்தவொரு விவகாரத்தையும் விவாதிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், சுல்தான் இப்ராகிமை சந்திக்க அல்லது தொடர்புக் கொள்ள, சுல்தான் ஒப்புக் கொண்டதாக பிரதமர் கூறினார்.

சுல்தான் இப்ராகிமை கடைசியாக, 2003-ஆம் ஆண்டில் தாம் பிரதமர் பதவியிலிருந்து விலகிய போது சந்தித்ததாகவும், தற்போது 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அவரை சந்தித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையே, நேற்று, சந்திப்பிற்குப் பின்னர், முதலாவதாக வெளியிடப்பட்ட புரோட்டோன் சாகா ரக வாகனத்தில், சுல்தான் அவர்கள் காரைச் செலுத்த, பிரதமரை செனாய் அனைத்துலக விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்றது அனைத்து ஊடகங்களிலும் பரவலாகப் பகிரப்பட்டது.

புரோட்டோன் 1” என்ற எண்ணைக் கொண்டிருக்கும் அந்நீல நிறப் புரோட்டான் சாகாசுல்தான் இஸ்கண்டாருக்கு, 1985-ஆம் ஆண்டில் மகாதீர் முதலாவதாக பிரதமர் பதவியை வகித்தபோது பரிசளித்தது என பெர்னாமா செய்தி குறிப்பிட்டிருந்தது.