Home உலகம் பிரெக்சிட் குழப்பம் : “மீண்டும் பேச்சு வார்த்தை நடத்துங்கள்”

பிரெக்சிட் குழப்பம் : “மீண்டும் பேச்சு வார்த்தை நடத்துங்கள்”

802
0
SHARE
Ad

இலண்டன் – பிரெக்சிட் எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறும் திட்டத்தில் மீண்டும் குழப்பமும், முட்டுக்கட்டைகளும் ஏற்பட்டிருக்கின்றன.

நேற்று செவ்வாய்க்கிழமை கூடிய பிரிட்டன் நாடாளுமன்றம் தெரெசா மேயின் பிரெக்சிட் வெளியேற்றத் திட்டத்தை நிராகரித்து, தாங்கள் முன்மொழிந்த திருத்தங்களை உள்ளடக்கிய புதிய திட்டத்துடன் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்துமாறு உத்தரவிட்டிருக்கிறது.

ஆனால், பிரசல்சைத் தலைநகராகக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியமோ, இதுதான் எங்களின் இறுதி முடிவு, இனி பேச்சு வார்த்தைக்கோ, திட்டத்தை மறு ஆய்வு செய்வதற்கோ முடியாது என உறுதியாக மறுத்துவிட்டது.

#TamilSchoolmychoice

1973-இல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்த பிரிட்டன், பொதுவாக்கெடுப்பின்படி அந்தக் கூட்டமைப்பிலிருந்து வெளியேற, இன்னும் இரண்டு மாதங்களே இருக்கின்றன.

அதற்குள் மறு பேச்சுவார்த்தைகள் மூலம் பிரெக்சிட் திட்டத்திற்கு மீண்டும் உயிரூட்ட முடியாது என்பது போன்ற சூழல் ஏற்பட்டுள்ளதால், இந்த விவகாரத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.