செமினி: அம்னோ கட்சியின் ஆலோசனைக் குழுத் தலைவரான துங்கு ரசாலி ஹம்சா பிரதமர் மகாதீரின் முக்கியமான அரசியல் எதிரிகளில் ஒருவராவார்.
நேற்று (திங்கட்கிழமை), செமினி சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற பிரச்சாரத்தின் போது, ஒரு வேளை மகாதீர் இல்லையென்றால் நாட்டில் தற்போது நிலவுகின்ற சூழல்களைப் பார்க்கின்ற பொழுது, எப்போதோ கலவரம் வெடித்திருக்கும் என ரசாலி தெரிவித்தார்.
மகாதீரின் அரசியல் அனுபவமும், முதிர்ச்சியும் நாட்டில் நடக்கக்கூடிய சூழலைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக அவர் நினைவுப்படுத்தினார். நாட்டை நல்முறையில் நிர்வகிப்பதற்காக, பிரதமர் மகாதீர் மேலும் சிறப்பான ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என ரசாலி தமது உரையில் தெரிவித்தார்.
நம்பிக்கைக் கூட்டணிக்குள் ஒரு சில குழப்பங்கள் அவ்வப்போது தலைத் தூக்குவதை மக்கள் கவனித்து வருகின்றனர். பிரதமர் மகாதீர் இல்லாத போது இம்மாதிரியான சூழல்களில் சரியான முடிவுகளை எடுப்பதற்கு அரசியல் முதிர்ச்சிப் பெற்றவர்கள் அக்கூட்டணியில் இல்லை என்பதே பெரும்பாலானோரின் கருத்தாக இருந்து வருகிறது.