Home நாடு ‘டான்ஸ்ரீ’ அந்தஸ்து கொண்ட ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயப் பொறுப்பாளர் விடுதலை

‘டான்ஸ்ரீ’ அந்தஸ்து கொண்ட ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயப் பொறுப்பாளர் விடுதலை

1051
0
SHARE
Ad

கோலாலம்பூர் – கடந்த சில நாட்களாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் தடுத்து வைக்கப்பட்டிருந்த, டான்ஸ்ரீ அந்தஸ்து கொண்ட ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் முக்கியப் பொறுப்பாளர் நேற்று நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.

அவரது உடல் நிலை, தொடர்ந்து ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைகளில் அவர் வழங்கி வரும் ஒத்துழைப்பு, ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, நீதிமன்றம் அவரைப் பிணையில் விடுதலை செய்தது.

இருப்பினும், அந்தப் பொறுப்பாளரின் மகனும் மற்றொரு நபரும் தொடர்ந்து ஊழல் தடுப்பு ஆணையத்தின் தடுப்புக் காவலில் இருந்து வருகின்றனர்.

#TamilSchoolmychoice

பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயம் உள்ளிட்ட ஆலயங்களை நிர்வகித்து வரும் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய தேவஸ்தானத்தின் சில செயல்பாடுகளில் எழுந்த புகார்களைத் தொடர்ந்து ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை நடத்தி இந்தக் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டது.