Home நாடு காதலரைக் கைப்பிடித்தார் அமைச்சர் இயோ பீ இன்

காதலரைக் கைப்பிடித்தார் அமைச்சர் இயோ பீ இன்

1764
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மலேசியாவில் அமைச்சர்களுக்கு திருமணம் நடைபெறுவது என்பது மிக அபூர்வமாக நடைபெறும் ஒன்றாகும். ஆனால், தற்போது அமைந்திருக்கும் நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தில் இரண்டு அமைச்சர்கள் திருமணம் ஆகாதவர்கள்.

விளையாட்டுத் துறை அமைச்சர் சைட் சாதிக் மற்றும் ஆற்றல், தொழில்நுட்பம், அறிவியல், பருவநிலை மாற்ற அமைச்சரான இயோ பீ இன் ஆகிய இருவருமே அவர்களாவர்.

கடந்த சில வாரங்களாக ஊடகங்கள் ஆரூடம் தெரிவித்தபடி, 36 வயதான இயோ பீ இன் நேற்று திங்கட்கிழமை (மார்ச் 11) தனது காதலரான லீ இயோ செங்கைக் கைப்பிடித்தார்.

#TamilSchoolmychoice

40 வயதான லீ இயோ செங் பிரபல கோடீஸ்வரர் – ஐஓஐ குழுமத்தின் தலைவர் லீ ஷின் செங்கின் கடைசிப் புதல்வராவார். லீ இயோ செங் தற்போது ஐஓஐ புரொபர்ட்டீஸ் குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.

அவர்களின் திருமணத்தைத் தொடர்ந்து விருந்து நிகழ்ச்சி எதிர்வரும் மார்ச் 29-ஆம் தேதி புத்ரா ஜெயா லீ மெரிடியன் தங்கும் விடுதியில் நடைபெறும்.