Home உலகம் நியூசிலாந்து பள்ளி வாசல் வளாகத்தில் துப்பாக்கிச் சூடு

நியூசிலாந்து பள்ளி வாசல் வளாகத்தில் துப்பாக்கிச் சூடு

1581
0
SHARE
Ad

கிரிஸ்ட்சர்ச் – (மலேசிய நேரம் காலை 9.45 மணி நிலவரம்) அமைதியான நாடுகளில் ஒன்றாகக் கருதப்படும் நியூசிலாந்தின் கிரிஸ்ட்சர்ச் நகரில் உள்ள ஒரு பள்ளிவாசலுக்கு அருகில் சற்று முன் துப்பாக்கிச் சூடுகள் நடைபெற்றதாக அனைத்துலக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஒரு நெருக்கடியான சம்பவம் நடைபெற்றிருப்பதாக நியூசிலாந்து காவல் துறையும் அறிவித்துள்ளது. பள்ளி வாசலுக்குள் பலர் காயமடைந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

அந்தப் பகுதியைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியிருக்கும் காவல் துறையினர் சுற்று வட்டாரத்திலுள்ள கட்டடங்களையும், பள்ளிகளையும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்து தீவிரமான சோதனைகள், தேடுதல் வேட்டைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

#TamilSchoolmychoice

(மேலும் விவரங்கள் தொடரும்)