கோலாலம்பூர்: நாட்டின் கடன் இன்னும் மூன்று ஆண்டுகளில் சமாளிக்கப்பட்டுவிடும் என பிரதமர் மகாதீர் முகமட் கூறினார். அதுவரையிலும், அனைத்து அரசு ஊழியர்களும் தற்காலிகமாக பொறுமைக் காக்குமாறும், அரசாங்கத்திற்கு ஒத்துழைக்குமாறும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.
தேசிய முன்னணி அரசாங்கம் நாட்டின் கடனை உயர்த்தியதன் காரணமாகத்தான் நாட்டின் நிதி நிலைமை இன்று கடினமாக சூழலை எதிர் கொண்டுள்ளது என அவர் மீண்டும் சுட்டிக் காட்டினார்.
பழைய கடன்கள் முழுமையாக செலுத்தப்பட்டு விட்டால், மீண்டும் அரசாங்கத்திற்கு நல்ல வருவாய் வரும், அதன் மூலம் அரசாங்க ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு ஏற்படும் என அவர் கூறினார்.