Home நாடு தவறான அமைப்புகளுக்கு தரப்பட்ட நிதி, தவறாக செலவழிக்கப்பட்டுள்ளது!- மித்ரா

தவறான அமைப்புகளுக்கு தரப்பட்ட நிதி, தவறாக செலவழிக்கப்பட்டுள்ளது!- மித்ரா

1252
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இந்திய சமூகத்திற்கு உதவுவதற்காக நூற்றுக்கணக்கான அரசு சாரா நிறுவனங்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட மில்லியன் கணக்கான பண ஒதுக்கீடு தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவு (மித்ரா) தெரிவித்துள்ளது.

அவற்றில், தனிப்பட்ட ஆதாயத்திற்காக உட்பட அப்பணம் பயன்படுத்தப்பட்டிருப்பதாக அது குறிப்பிட்டுள்ளது. முன்னாள் அரசாங்கத்தால், அறிமுகப்படுத்தப்பட்ட, செடிக்  (SEDIC)  எனப்படும்  இந்திய  சமூக பொருளாதார மேம்பாட்டுப் பிரிவு தற்போது மித்ரா எனும் பெயரில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

ஜனவரி மாதத்தில் தொடங்கப்பட்ட அறிக்கையில், இந்திய சமூகத்திற்கான திட்டங்களை நடத்துவதற்கு பெரும்பான்மையான மானியங்கள் பயன்படுத்தப்படவில்லை எனக் கண்டறியப்பட்டுள்ளதாக மித்ரா தலைமை இயக்குனர் எஸ். இலட்சுமணன் கூறினார்.

#TamilSchoolmychoice

சில அரசு சாரா நிறுவனங்கள் அப்பணத்தைக் கொண்டு தங்கள் நிறுவனங்களுக்கு சொத்துக்களை வாங்கி இருக்கின்றன. சில அரசு சாரா நிறுவனங்கள் குடும்ப உறுப்பினர்களுக்குள் இயங்கி வந்துள்ளன” என அவர் குறிப்பிட்டார்.

அவர்களில் சிலர் காணாமல் போயுள்ளனர். மேலும், அந்த அமைப்புகளின் முகவரிகள் சரியானதாக இல்லைஎன்று அவர் டி ஸ்டார் செய்தித் தளத்திற்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார். சுமார் 800-க்கும் மேற்பட்ட அரசு சாரா நிறுவனங்களுக்கு இதற்கு முன்பதாக உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலும் சிக்கல் நிறைந்த அமைப்புகள் ஆகும் என அவர் கூறினார்.

முந்தைய நிருவாகத்தால் செய்யப்பட்ட அறிவிப்புகளின் அடிப்படையில், கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் இந்திய சமூகத்திற்கான திட்டங்களை செயல்படுத்துவதற்கான செயல்பாட்டு மற்றும் மேம்பாட்டுச் செலவுகளுக்காக சுமார் 230 மில்லியனுக்கும் மேலாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், தவறாகப் பணத்தை செலவழித்த அமைப்புகளை கூடிய விரைவில் கண்டறிந்து அவை கருப்பு பட்டியல் இடப்படும் என இலச்சுமணன் தெரிவித்தார். மேலும், இந்த விவகாரம் குறித்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடமும் (எம்ஏசிசி) புகார் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.